‘தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
x
Daily Thanthi 2025-06-14 10:27:41.0
t-max-icont-min-icon

‘தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும்’ - இஸ்ரேல் எச்சரிக்கை 

இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரான் தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், “ஈரான் மக்களை பணயக் கைதிகளாக மாற்றி, இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தெஹ்ரான் மக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை ஈரான் தலைவர் உருவாக்குகிறார். இஸ்ரேல் மீதான தாக்குதலை அலி காமெனி நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story