தேய்பிறை அஷ்டமி... கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
x
Daily Thanthi 2025-10-14 07:36:55.0
t-max-icont-min-icon

தேய்பிறை அஷ்டமி... கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் மோகனூர் அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.

1 More update

Next Story