கேரளாவின் கொச்சி நகருக்கு வருகை தந்துள்ள மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
Daily Thanthi 2025-04-15 10:29:33.0
t-max-icont-min-icon

கேரளாவின் கொச்சி நகருக்கு வருகை தந்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு சட்டம் பற்றி கூறும்போது, சரியான உரிமையாளரின் ஒவ்வோர் அங்குல நிலமும் பாதுகாக்கப்படும் வகையிலான சட்டங்களை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.

நாங்கள் முன்பு போலவே, இந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தோம். வக்புக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இது முஸ்லிம்களை இலக்காக கொள்ளப்பட்டதன்று.

முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது என கூறப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. கடந்த கால தவறுகளை திருத்தியமைப்பதற்காகவே நாங்கள் இருக்கிறோம். மக்களுக்கு நீதியை வழங்குவதற்காகவும் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

1 More update

Next Story