தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
x
Daily Thanthi 2025-05-15 11:44:39.0
t-max-icont-min-icon

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பிற்கு உள்ள முக்கியத்துவம் பற்றி அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கத்திடம், சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், எங்களை தவிர்க்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது பற்றி ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுபற்றி ஓ. பன்னீர் செல்வம் நாளை அறிவிப்பார் என கூறினார்.

இந்நிலையில், சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நிருபர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, தேர்தல் கூட்டணி பற்றி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தேன்.

சட்டசபை தேர்த்லில் எந்த மாதிரியான முடிவெடுக்க வேண்டும் என்பதுபற்றி கருத்துகளை கேட்டுள்ளோம். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்.

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம். கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை என்றார்.

1 More update

Next Story