எஸ்.ஐ.ஆர். விவகாரம்; தி.மு.க.வை கண்டித்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
x
Daily Thanthi 2025-11-15 13:16:09.0
t-max-icont-min-icon

எஸ்.ஐ.ஆர். விவகாரம்; தி.மு.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

“தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை(எஸ்.ஐ.ஆர்.) தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில், 17.11.2025 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

1 More update

Next Story