அர்ஜென்டினா ஆலையில் வெடிவிபத்து: 22 பேர் காயம்;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
x
Daily Thanthi 2025-11-15 13:46:11.0
t-max-icont-min-icon

அர்ஜென்டினா ஆலையில் வெடிவிபத்து: 22 பேர் காயம்; விமான சேவை பாதிப்பு

அர்ஜென்டினாவின் பியூனோஸ் அயர்ஸ் நகருக்கு வெளியே கார்லோஸ் ஸ்பெகாசினி என்ற நகரில் ஆலை ஒன்றில் வேளாண் ரசாயன பொருட்களின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு இந்த ஆலையில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், அருகேயிருந்த எஜீஜா சர்வதேச விமான நிலையத்தின் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பலரும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

1 More update

Next Story