டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் கடுமையான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025
Daily Thanthi 2025-02-17 03:41:06.0
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது.

இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதேபோன்று, டெல்லியில் ரெயில்வே நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள், கடைகளில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள் என பலரும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story