கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
x
Daily Thanthi 2025-10-18 11:05:40.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார். அதேவேளை, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூகவலைதளங்கள் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டன. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

அந்த வகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி அவதூறு பரப்பியதாக சென்னை கோடம்பாக்கத்தை ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் (வயது 64) என்பவரை கடந்த 7ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story