திருச்செந்தூர் கோவிலில் செப்டம்பர் 4-ந்தேதி முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025
x
Daily Thanthi 2025-09-02 13:16:12.0
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிலில் செப்டம்பர் 4-ந்தேதி முதல் மீண்டும் தங்கத்தேர் வீதி உலா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் செப்டம்பர் 4-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் மீண்டும் தங்கத்தேர் வீதி உலா வர இருக்கிறது. இது தொடர்பாக, கோவில் இணை ஆணையர் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் கிரிப்பிரகாரத்தில் தங்கத்தேர் உலா நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், கோவிலில் பெருந்திட்ட வளாக பணிகளின் ஒரு பகுதியாக தரைத்தள பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக கடந்த 17-7-2024 முதல் தற்காலிகமாக தங்கத்தேர் உலா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, கிரிப்பிரகார தரைத்தள பணிகள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து, வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் மீண்டும் தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story