துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
x
Daily Thanthi 2025-11-21 10:59:59.0
t-max-icont-min-icon

துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து

துபாய் விமான கண்காட்சியில் இன்று இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. மதியம் 2.10 மணியளவில் சாகச செயலில் ஈடுபட்டிருந்தபோது தேஜஸ் போர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் வெடித்து சிதறியது. விமானத்தை இயக்கிய விமானியின் நிலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story