குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025
x
Daily Thanthi 2025-06-23 04:54:23.0
t-max-icont-min-icon

குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்பே அறிவித்திருந்தது.

இதற்கான தேர்தல் பிரசாரம் கடந்த 17-ம் தேதி முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, 5 சட்டசபை தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், 5 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வாக்குசாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1 More update

Next Story