சென்னையில் வரும் 28-ந்தேதி த.வெ.க. பொதுக்குழு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025
Daily Thanthi 2025-03-24 13:44:09.0
t-max-icont-min-icon

சென்னையில் வரும் 28-ந்தேதி த.வெ.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், 234 தொகுதிகளில் உள்ள பிரதான பிரச்சினைகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

பொதுக்குழுவில் பங்கேற்கும் நிர்வாகிகள் தங்கள் தொகுதியில் உள்ள பிரதான 5 பிரச்சினைகள், மக்களின் கோரிக்கைகளை கண்டறிந்து வரவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்து நிறைவேற்றாமல் இருக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து கூட்டத்திற்கு கொண்டு வரவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

1 More update

Next Story