
"சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு தெரியாமல்.." - ராகுல் காந்தியை கண்டித்த சுப்ரீம்கோர்ட்டு
வீர் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம்கோர்ட்டில், நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் ராகுல் காந்திக்கு நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். அதில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு தெரியாமல் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடக்கூடாது.
இதுபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற அவதூறு கருத்துக்களை வருங்காலத்தில் பேசினால் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.






