ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? - அமித்ஷா விளக்கம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
x
Daily Thanthi 2025-08-25 05:59:42.0
t-max-icont-min-icon

ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? - அமித்ஷா விளக்கம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தனிப்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாகவே ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். வேறு காரணமில்லை; ஜெகதீப் தன்கர் ராஜினாமா விவகாரத்தில் வேறு எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கக்கூடாது. தனது பதவிக் காலத்தில் ஜெகதீப் தன்கர் சிறப்பாகவே செயல்பட்டார்.

லாலு பிரசாத்தை காப்பாற்ற மன்மோகன் சிங் கொண்டு வந்த அவசர சட்டத்தை கிழித்து எறிந்தவர் ராகுல் காந்தி. 130-வது சட்ட திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பது நியாயமா?. பிரதமர், முதல்-மந்திரியின் பதவி பறிப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிச்சயமாக நிறைவேறும். பதவி பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story