நாடு மின்சார வேகத்தில் முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி

பிகானீர்-டெல்லி கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையையும், ஜோத்பூர் - டெல்லி கண்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையும் உதய்பூர் நகரம்- சண்டிகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரெயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்டோருக்கு 15,000க்கும் மேலான பணி நியமன கடிதம் வழங்கினார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நாடு மின்சார வேகத்தில் முன்னேறி வருகிறது. இந்த வேகம் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியது. இந்தியாவின் மின் திறனின் புதிய அத்தியாயம் ராஜஸ்தான் மண்ணிலிருந்து எழுதப்படுகிறது. ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம், மராட்டியத்தில் ரூ.90,000 கோடிக்கு மேல் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.மின்சாரத்தின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் அரசு புறக்கணித்தது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னும் நாட்டில் 18,000 கிராமங்களில் மின் கம்பங்கள் இல்லை. ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கி, 25 மில்லியன் வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கினோம் என்றார்.






