“தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க” - தொண்டர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
x
Daily Thanthi 2025-04-26 12:20:52.0
t-max-icont-min-icon

“தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க” - தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் கோவையில் தொடங்கி உள்ளது.

ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த தவெக வாக்குச்சாவடி முகவர்களுக்கான இந்த கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

கருத்தரங்கு கூட்டத்தில் தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்தார், அப்போது, “Friends, அங்க நிறைய Wire போகுது... பாதுகாப்புக்காக சொல்றேன், கொஞ்சம் பின்னாடி வந்துடுங்க. இன்னும் 2, 3 மணி நேரம் இங்க உங்ககூடதான் இருக்கப்போறேன். தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க” என்று கூறினார்.

1 More update

Next Story