
மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய அட்வைஸ் என்ன..?
நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செய்து, அந்நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பசியும் பிணியும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு என வள்ளுவர் கூறியிருக்கிறார். மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்குவது மட்டுமின்றி அவர்களின் பசியையும் போக்க வேண்டும். 20 லட்சம் மாணவர்கள் சூடான, சுவையான, சத்தான உணவை சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு செல்வார்கள்.
காலை உணவுத் திட்டத்தை செலவு என சொல்ல மாட்டேன். சூப்பரான சமூக முதலீடுதான் இந்த திட்டம். மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து உயர்ந்தால் போதும். அதுவே இந்த திட்டத்திற்கான வெற்றிதான். காலை உணவுத் திட்டத்தை நானே நேரடியாக கண்காணித்து வருகிறேன்
மாணவர்களே, நல்லா சாப்பிடுங்க, நல்லா படிங்க, நல்லா விளையாடுங்க.. உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கும். எங்களுக்கு எப்போதும் நீங்கள்தான்.. உங்களுக்காகதான் நாங்கள் இருக்கிறோம், இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






