டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-05-2025
x
Daily Thanthi 2025-05-27 10:44:22.0
t-max-icont-min-icon

டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து அதனை அறிவித்துள்ளனர். இதேபோன்று தண்டையார்பேட்டையில் இருந்து விமானங்களுக்கு கொண்டு செல்லப்படும் பெட்ரோல் டேங்கர் லாரிகள் மற்றும் அத்திப்பட்டில் இருந்து இயக்கப்படும் டேங்கர் லாரிகள் முழுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது என சங்கத்தின் தலைவர் மூர்த்தி கூறியுள்ளார்.

இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் என்றும், இதற்கு ஆதரவாக மற்ற பெட்ரோல் முனையத்தின் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

1 More update

Next Story