விநாயகர் சதுர்த்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்துநாடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
x
Daily Thanthi 2025-08-27 07:08:32.0
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் கோவில்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பிரணவப் பொருளாகத் திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை பிரார்த்தித்து, அனைவருக்கும் எனது உளமார்ந்த விநாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story