ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்: 5... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
x
Daily Thanthi 2025-10-27 06:12:53.0
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி

பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்றுமுன் தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றதாகவும் அப்போது நடந்த மோதலில் 25 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

1 More update

Next Story