நல்லகண்ணு உடல் நிலை குறித்து அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
x
Daily Thanthi 2025-08-28 07:25:21.0
t-max-icont-min-icon

நல்லகண்ணு உடல் நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன..?

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

கடந்த 48 மணி நேரத்தில் உடல் நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு, அவரின் உறவினரை அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தார். மீண்டும் அவர் உணவுக் குழாயில் அடைப்பு காரணமாக மூச்சு பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மக்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க தனி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story