கெஜ்ரிவால் நாளை பஞ்சாப் பயணம்; வெள்ளம் பாதித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025
x
Daily Thanthi 2025-09-03 11:16:32.0
t-max-icont-min-icon

கெஜ்ரிவால் நாளை பஞ்சாப் பயணம்; வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்

வடமாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பரவலாக பருவமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பஞ்சாபில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் மற்றும் மாநில பொறுப்பு தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகிய 3 பேரும் பஞ்சாப் பக்கமே போகவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், கெஜ்ரிவால், பஞ்சாப் மாநிலத்திற்கு நாளை சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் செல்கிறார்.

1 More update

Next Story