சீன அதிபர் ஜின்பிங்குடன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
x
Daily Thanthi 2025-10-30 03:38:36.0
t-max-icont-min-icon

சீன அதிபர் ஜின்பிங்குடன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு

சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தென்கொரியாவின் புசான் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங், டிரம்பிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை மூலம் உலக பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.

1 More update

Next Story