இந்தியாவில் அறிமுகமாகிறது டிரைவர் இல்லாத... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
x
Daily Thanthi 2025-10-30 03:48:57.0
t-max-icont-min-icon

இந்தியாவில் அறிமுகமாகிறது டிரைவர் இல்லாத கார்!

டிரைவர் இல்லாத கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்கள் அடங்கிய குழுவினர் இந்த டிரைவர் இல்லாத தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர்.

இந்த கார் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கார் தயாரித்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக குறுகலான சாலையில் எப்படி இயங்கும்?, சாலைகளின் குறுக்கே நாய்கள், ஆடு, மாடுகள் வந்தால் எப்படி இயங்கும்?, வாகனங்களுக்கு வழிவிடுவது உள்பட பல்வேறு கட்ட சோதனை செய்து, அதற்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கார் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story