விவசாயம், விவசாயிகளை பற்றி தெரியாமல் அறிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
x
Daily Thanthi 2025-10-30 03:54:03.0
t-max-icont-min-icon

விவசாயம், விவசாயிகளை பற்றி தெரியாமல் அறிக்கை விடுகிறார் - விஜய் மீது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கு

விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விட்டு வருகின்றனர். மேலும் அவர்கள், பச்சை துண்டுகளை கட்டிக்கொண்டு தாங்களும் விவசாயிகள் என கூறுகின்றனர். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் சீட்டு பெறுவதற்காக தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

தற்போது அறிக்கை விடும் த.வெ.க. தலைவர் விஜய், கொரோனா காலத்தில் எங்கிருந்தார். கொரோனா காலத்தில் தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கினர். கஷ்டம் வரும்போது யார் உதவி செய்கிறார்களோ? அவர்களை தான் மக்கள் அடையாளம் காண்பார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

1 More update

Next Story