எரிபொருள் இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை... ... #உக்ரைன் லைவ் அப்டேட்ஸ்:  டான்பாஸ் பகுதியில் ரஷியா தீவிர தாக்குதல்: ஆயுதங்கள் கேட்டு நட்பு நாடுகளிடம் உதவி கோரிய உக்ரைன்..!
x
Daily Thanthi 2022-05-24 14:38:13.0

எரிபொருள் இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை கைவிட ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை அங்கு போர் நடைபெற்று வரும் நிலையில், தாக்குதலை தொடங்கிய ரஷியாவின் மீது பல்வேறு உலக நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்து இருப்பதை முடிவுக்கு கொண்டு வர 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 300 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்துள்ளார்.


Next Story