40 நகரங்களில் தாக்குதல்  உக்ரைன் மீதான போரில் ரஷிய... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் போர் தீவிரம்: 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்
Daily Thanthi 2022-05-26 23:10:32.0
t-max-icont-min-icon

40 நகரங்களில் தாக்குதல்

உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளின் பார்வை கிழக்கு உக்ரைனில் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் 40 நகரங்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன.

லுஹான்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் கை மேலோங்கி உள்ளது. வான்வழி தாக்குதலையும், பீரங்கி தாக்குதலையும் ரஷிய படைகள் தீவிரப்படுத்தியதன் விளைவு இதுவாகும். இதை உக்ரைன் படைத்தளபதி ஒப்புக்கொண்டுள்ளார். செவிரோடொனெட்ஸ்க் பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. ஆனால் ஸ்திரமாக உள்ளது.

போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரையில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் மட்டுமே 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இதை உக்ரைன் அரசின் தலைமை வக்கீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 240 ஆகும்.

1 More update

Next Story