50 வயதை கடந்தும் திருமணம் செய்யாத நட்சத்திர நடிகைகள்

50 வயதை கடந்தும் இன்னும் பல நடிகைகள் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்
சென்னை
சுஷ்மிதா சென்
பாலிவுட் துறையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு தற்போது 54 வயது. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்கிறார்.
தபு
தமிழ், தெலுங்கு , இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் . பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள தபு, இன்னும் பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு தற்போது 53 வயது. இருப்பினும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஷோபனா
ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ஷோபனா, இப்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 54 வயது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.
அமிஷா படேல்
தெலுங்கு மற்றும் இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நீண்ட காலமாக படங்களில் இருந்து விலகி இருந்த அவர், சமீபத்தில் கதார் 2 படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். தற்போது அவருக்கு 50 வயதாகிறது. திருமணத்திலிருந்து விலகி இருக்கிறார்.
நக்மா
தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை. தற்போது அவருக்கு 50 வயது. அவர் இன்னும் திருமணம் செய்யவில்லை. படங்களில் இருந்தும் விலகி இருக்கிறார்.






