நாளை திரையரங்குகளில் வெளியாகும் 6 திரைப்படங்கள் (21-11-2025)


நாளை திரையரங்குகளில் வெளியாகும் 6 திரைப்படங்கள் (21-11-2025)
x

நவம்பர் 21ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சென்னை,

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் நவம்பர் 21ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்

இந்நிலையில் நவம்பர் 21ம் தேதி 6 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. கவினின் மாஸ்க், அர்ஜுன் நடிப்பில் தீயவர் குலை நடுங்க, முனீஸ்காந்தின் மிடில் கிளாஸ், யெல்லோ, இரவின் விழிகள் மற்றும் விஜய்-சூர்யா நடிப்பில் ப்ரண்ட்ஸ் (ரீ ரிலீஸ்) ஆகிய 6 படங்கள் நாளை திரைக்கு வருகின்றன.

1. மாஸ்க்

விக்ரனன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ படத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2. தீயவர் குலை நடுங்க

தினேஷ் லட்சுமணன் எழுதி , இயக்கியுள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் அர்ஜுன் , ஐஸ்வர்யா, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

3. மிடில் கிளாஸ்

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தில் முனீஸ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

4. யெல்லோ,

ஹரி மகாதேவன் இயக்கத்தில் யூடியுப் பிரபலமான பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ‘யெல்லோ’ படத்தில் நடித்துள்ளனர்.

5. இரவின் விழிகள்

சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் மஹேந்திரன், நீமா ரேய் , நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் ‘இரவின் விழிகள்’ படத்தில் நடித்துள்ளனர்.ஏ.எம்.அசார் இசையமைத்துள்ளார்.

6. ப்ரண்ட்ஸ் (ரீ-ரிலீஸ்)

சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படம் நாளை ரீ-ரிலீஸாகிறது

1 More update

Next Story