83-வது கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு

ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் ‘கோல்டன் குளோப் விருது’ வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெற்றது
ஆஸ்கார் விருதுகளுக்கு அடுத்தப்படியான முக்கிய விருதுகளில் ஒன்று கோல்டன் குளோப் விருதுகள். சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் பாரின் பிரஸ் அசோசியேஷனால் வழங்கப்பட்டு வரும் விருதுவிழா இந்த ஆண்டு அதன் 83 வது பதிப்பை எட்டியுள்ளது.
2025ம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைக் கவிரவிக்கும் இந்த விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் திரைப்படங்களுக்கான 14 விருதுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 13 விருதுகள் அடங்கும். மேலும் முதல் முறையாக சிறந்த பாட்காஸ்ட் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.
கோல்டன் குளோப் விருதுகளில் ‘ஹேம்நெட்’, ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ மற்றும் ‘அடோலசென்ஸ்’ ஆகிய படைப்புகள் பெரும்பாலான விருதுகளை வென்றன
புகழ்பெற்ற இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனின்‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ (One Battle After Another) திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, முக்கிய 4 விருதுகளைத் தட்டிச் சென்றது. லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த இப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநர் ஆகிய விருதுகளை வென்றது. இப்படத்தில் நடித்த டேயானா டெய்லர் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்த ‘சின்னஸ்’ (Sinners) திரைப்படம், சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கான விருதை வென்றது.
தொலைக்காட்சி பிரிவில், ‘அடோலசென்ஸ்’ (Adolescence) தொடர் ஆதிக்கம் செலுத்தியது. சிறந்த லிமிடெட் சீரிஸ் உட்பட மொத்தம் 4 விருதுகளை வென்றது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த பாட்காஸ்ட் பிரிவில்,‘ஏமி போலர்’ (Amy Poehler) தனது ‘Good Hang With Amy Poehler’ நிகழ்ச்சிக்காக முதல் கோல்டன் குளோப் விருதை வென்று வரலாறு படைத்தார்.
ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் ‘தி சீக்ரெட் ஏஜென்ட்’ (The Secret Agent) விருதை வென்றது.






