மகேஷ் பாபுவின் குடும்பத்திலிருந்து சினிமாவில் களமிறங்கும் புதிய நடிகை


மகேஷ் பாபுவின் குடும்பத்திலிருந்து சினிமாவில் களமிறங்கும் புதிய நடிகை
x

நடிகர் மகேஷ் பாபுவின் குடும்பத்தில் இருந்து ஒரு புதிய நடிகை சினிமாவில் களமிறங்க இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, தற்போது ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாய் தயாராகும் இப்படத்துக்கு ‘வாரணாசி' என்று பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்.

மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய நடிகராவார். அவர் வழியில் மகேஷ் பாபுவும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அவரது குடும்பத்தில் இருந்து ஒரு புதிய நடிகை சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அதாவது, மகேஷ் பாபுவின் அக்கா மஞ்சுளா கட்டாம்னேனியின் மகள் ஜான்வி ஸ்வரூப் நாயகியாக அறிமுகமாக உள்ளார். தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படிப்பு படித்திருக்கும் ஜான்வி, தற்போது சினிமாவில் களமிறங்க போகிறாராம். வெகுவிரைவில் அவரது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story