சிவராஜ்குமார், உபேந்திரா நடித்த “45 தி மூவி” படத்திலிருந்து வெளியான பாடல் வைரல்

அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
சென்னை,
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 45 தி மூவி. இந்த படத்தினை பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
பேண்டசி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 25ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், க்ளிம்ப்ஸ், டீசர் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆப்ரோ டப்பாங்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தமிழில் கானா காதர் எழுதி பாடியுள்ளார். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். ஜானி நடனம் அமைக்க, ஆப்பிரிக்க நடனக் கலைஞர்கள் இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






