ரசிகர்களின் உற்சாக வரவேற்பில் 'ஆண்பாவம் பொல்லாதது'.. படக்குழுவினருக்கு குவியும் பாராட்டுகள்

இந்த படத்தில் ரியோராதஜும், மாளவிகா மனோஜும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள்.
சென்னை,
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள புதிய படம், 'ஆண்பாவம் பொல்லாதது'. ரியோராஜ் கதாநாயகனாகவும், மாளவிகா மனோஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஷீலா ராஜ்குமார், விக் னேஷ்காந்த், ஏ.வெங்கடேஷ், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கடந்த 31-ந்தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஆண்பாவம் பொல் லாதது' படம் குறித்து கலையரசன் தங்கவேல் கூறியதாவது:- கணவன், மனைவி இடையேயான ஈகோ பிரச்சினை முற்றி விவாகரத்து வரை செல்கிறது. நீதிமன்றத்தில் யாருடைய ஈகோ வெற்றிபெற்றது? விவாகரத்து என்ன ஆனது? என்பதை கலகலப்பாக சொல்லும் கதை.
இந்த படத்தில் ரியோராதஜும், மாளவிகா மனோஜும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். இருவருடைய நடிப்புக்கும் பாராட்டுகள் குவிகிறது. 'யாருப்பா நீ எங்கள் மனதில் உள்ளதை அப்படியே போட்டு உடைக்கிறாயே...' என ரியோவுக்கு ஆண்கள் தரப்பில் பாராட்டுகள் கிடைத்து வருகிறது. பெண்ணியம் பேசும் பெண்களும் இப்படத்தை கொண்டாடுகிறார்கள். கலகலப்புக்கு முழு கியாரண்டி என படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் பாராட்டுகிறார்கள்.
ஷீலாவின் விக்னேஷ்காந்த், 'போட்டி' நடிப்பும், ஜென்சன் திவாகர் என ஒட்டுமொத்த நடிகர் நடிகைகள் சிறப்பாக நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும், சித்து குமாரின் இசையும் படத்தை பேசவைக்கின்றன. நல்ல படங்களை அங்கீகரிக்க ரசிகர்கள் தவறுவது இல்லை. அந்த வகையில் இந்த படத்தை வெற்றிப் படமாக்கி தந்த ரசிகர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம், என்று இயக்குனர் கலையரசன் தங்கவேல் தெரிவித்துள்ளார்.






