2-வது குழந்தையை வரவேற்க தயாராகும் ராம் சரண் - உபாசனா தம்பதி

வளைகாப்பு வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து உபாசனா இதனை அறிவித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராகியிருக்கிறார்கள். வளைகாப்பு வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து உபாசனா இதனை அறிவித்துள்ளார்.
ராம் சரண் மற்றும் உபாசனா இருவரும் ஜூன் 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த தம்பதி இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராகியிருக்கிறார்கள்.
ராம்சரண் புகழ்பெற்ற திரைப்பட நடிகர். ஆர்ஆர்ஆர், மகதீரா, ரங்கஸ்தலம் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றவர். அவரது மனைவி உபசனா ஒரு தொழில் அதிபர்.
Related Tags :
Next Story






