ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் நடிகர் காலமானார்


ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் நடிகர் காலமானார்
x

பிரபல ஹாலிவுட் மற்​றும் பிரெஞ்சு நடிகர் டெக்கி காரியோ புற்​று​நோ​யால் கால​மா​னார்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரை 25 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. சீன் கானரி தொடக்க கால படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தார். அவருக்கு பிறகு ரோஜர் மூர், ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து புகழ் பெற்றார். கடைசியாக வெளியான 5 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தவர் டேனியல் கிரேக். கடைசியாக 2021ல் 'நோ டைம் டூ டை' என்ற படம் வெளியானது. அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஜேம்​ஸ்​பாண்ட் படமான ‘கோல்​டன் ஐ’ படத்​தில் டெக்கி காரியோ வில்​ல​னாக நடித்​துப் பிரபல​மா​னார். ஹாலிவுட்​டில் வெளி​யான பேட் பாய்​ஸ், நோஸ்ட்​ரா​டா​மஸ், த பேட்​ரி​யாட் என பல படங்​களில் நடித்​துள்​ளார். பிரெஞ்சு படங்​களான, த மெசஞ்​சர், கிஸ் ஆப் டிராகன் என ஏராளமான படங்​களில் நடித்​துள்​ளார்.


பிரான்​ஸின் பிரித்​தானி​யில் வசித்து வந்த இவர் புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். அதற்​காகச் சிகிச்​சைப் பெற்று வந்த நிலை​யில் கடந்த அக்டோபர் 31ம் தேதி மரணமடைந்​தார்.

1 More update

Next Story