எல்லை மீறிய நடிகர்... தமன்னா பகிர்ந்த கசப்பான சம்பவம்


எல்லை மீறிய நடிகர்... தமன்னா பகிர்ந்த கசப்பான சம்பவம்
x

கசப்பான சம்பவங்களும் என் பயணத்தில் உண்டு என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள தமன்னா, பாலிவுட் சினிமாவிலும் கவர்ச்சியில் கலக்கி வருகிறார். இவரது குத்துப்பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பால் நிற மேனி நடிகை என புகழப்படும் தமன்னா, தன்னிடம் ஒரு நடிகர் மோசமாக நடந்து கொண்டதாக தற்போது தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "தென்னிந்திய சினிமாவில் நான் நடிக்க தொடங்கியபோது, ஒரு படத்தில் என்னுடன் நடித்த நடிகர் ஒருவர் எனக்கு தொந்தரவு கொடுத்தார். என்னிடம் கொஞ்சம் எல்லை மீறி நடக்கவும் தொடங்கினார்.

அவரது நடத்தை எனக்கு சங்கடத்தை கொடுத்தது. இதுபோன்று நடந்து கொண்டால் இனி நடிக்கமாட்டேன் என சொன்னபின் அந்த நடிகர் மன்னிப்பு கேட்டார். இப்படி கசப்பான சம்பவங்களும் என் பயணத்தில் உண்டு" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story