’விஜய் ரசிகர்கள் பராசக்தி மீது எதிர்மறை கருத்துகளைப் பரப்புகிறார்களா?’ - சிவகார்த்திகேயன் பதில்


actorvijay fans are spreading negativity on Parasakthi? - Sivakarthikeyan answers
x

’விஜய் ரசிகர்கள் பராசக்தி மீது எதிர்மறை கருத்துகளைப் பரப்புகிறார்களா?’ என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சரத்குமார், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களுக்கு சிவகார்த்திகேயன் பேட்டி அளித்தார். அப்போது ’விஜய் ரசிகர்கள் பராசக்தி மீது எதிர்மறை கருத்துகளைப் பரப்புகிறார்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,

’இல்லை. ஒரு சில ரசிகர்கள் அப்படி பேசுகிறார்கள். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எல்லோரும் என்று பொதுவாக சொல்ல முடியாது. நாங்கள் எப்போதும் சகோதரர்களை போலவே இருக்கிறோம், அது அப்படியே தொடரும்’ என்றார்.

1 More update

Next Story