மாரி செல்வராஜை குறிப்பிட்டு நடிகை அனுபமா வெளியிட்ட வீடியோ வைரல்

நடிகை அனுபமா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
மலையாளத்தில் வெளியான பிரேமம் (2015) படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 17ந் தேதி பைசன் படம் வெளியானது.
இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் தயாரித்துள்ள இந்த படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு எல்லோரும் ஒன்றாக சமமாக வாழ்வோம் என்கிற கருத்தை பேசுகிறது.
இந்த நிலையில், பைசன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அனுபமா இயக்குனர் மாரி செல்வராஜை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னை உங்கள் கிட்டனின் ராணியாக்கியதற்கு நன்றி ஐயா.. பைசன் எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிக்கும்" என்று பதிவிட்டு அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






