52 வயதில் 50-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


52 வயதில் 50-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
x

கொரோனா ஊரடங்கு காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார் என கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர்.

மும்பை,

இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. அர்பாஸ்கானை திருமணம் செய்து கொண்ட மலைக்கா அரோரா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரும் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருடன் மலைக்கா அரோராவுக்கு காதல் ஏற்பட்டது.

மலைக்காவும் அவரை விட 12 வயது குறைந்த அர்ஜுன் கபூரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்தாண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பிரிந்த பிறகும் நண்பர்களாக இருந்து வந்தனர். சமீபத்தில் நடந்த ஹோம்பவுண்ட் படத்தின் பிரீமியர் காட்சியின் போது மலைக்காவும், அர்ஜுன் கபூரும் கட்டி பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிலையில், கடந்த 23-ந்தேதி மலைக்கா அரோரா தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது நெருங்கிய தோழி கரீனா கபூர், சகோதரி அம்ரிதா அரோரா உள்ளிட்டோர் மலைக்கா அரோராவின் பிறந்தநாள் பார்ட்டி தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர். அந்த பிறந்தநாள் கேக்கில் ‘50’ என்ற எண் இடம்பெற்றிருந்தது. மேலும் மலைக்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலும், “எனது 50-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மலைக்கா அரோரா குறித்து இணையதளங்களில் கிடைக்கும் தகவல்களில், அவர் 1973-ம் ஆண்டு அக்டோபர் 23-ந்தேதி பிறந்துள்ளார் என்று தெரியவருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டில் அவருக்கு 52 வயது ஆகிறது. ஆனால் 52 வயதில் மலைக்கா 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

மலைக்கா கடந்த 2019-ம் ஆண்டு தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களையும் நெட்டிசன்கள் தேடிப் பிடித்து ஆதாரமாக பகிர்ந்து வருகின்றனர். உண்மையான வயதை கூறுவதற்கு தயக்கம் காட்டுவது ஏன்? என்று மலைக்காவிற்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் வயதை கணக்கிடும்போது கொரோனா ஊரடங்கு காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார் எனவும் கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர்.

1 More update

Next Story