இயக்குனர் மாரி செல்வராஜை கேள்வி கேட்ட நடிகை

சென்னை சாலி கிராமத்தில் ’மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சென்னை,
தமிழிலும் அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகைகள் இருக்கிறோம் என இயக்குனர் மாரி செல்வராஜை பார்த்து நடிகை ஆராத்யா கேள்வி கேட்டுள்ளார்.
சென்னை சாலி கிராமத்தில் ’மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பேசுகையில், ‘’மாரி செல்வராஜ் சாருடைய ஒரு நேர்காணலை பார்த்திருப்போம். அதில் அவர் நான் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகைகளைதான் என் படங்களுக்கு எடுப்பேன். அது மலையாளி அப்படியெல்லாம் பார்ப்பதில்லை. அர்ப்பணிப்போடு இருந்தார்கள் நான் எடுத்தேன் என்று கூறி இருந்தார்.
இங்க தமிழிலும் அர்ப்பணிபோடு உள்ள நடிகைகள் இருக்கிறோம் சார். நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு உழைப்பை போடுகிறோம். அது உங்களுடைய கண்களுக்கும் காதுகளுக்கும் வந்து சேரவில்லை. அதை எப்படி சேர்ப்பதென்றும் தெரியவில்லை. அர்ப்பணிப்போடு உள்ள நடிகைகள் தமிழிலும் இருக்கிறோம்’ என்றார்.






