ஹீரோயினுடன் காதலா? - 'சையாரா' பட நடிகர் விளக்கம்


Ahaan Panday finally breaks his silence on dating Aneet Padda after Saiyaara success
x
தினத்தந்தி 21 Nov 2025 12:48 PM IST (Updated: 21 Nov 2025 12:52 PM IST)
t-max-icont-min-icon

'சையாரா ' படத்தில் அனீத் பத்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.

சென்னை,

இந்த வருடம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய படம் 'சையாரா ' . எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்டானது. இதில் அனன்யா பாண்டேயின் உறவினர் அஹான் பாண்டே கதாநாயகியாக அறிமுகமானார். அதே நேரத்தில் பாலிவுட் நடிகை அனீத் பத்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.

திரையில் ஜோடியாகத் நடித்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலிப்பதாக சில காலமாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு அஹான் பாண்டே பதிலளித்தார். ஒரு நேர்காணலில், அவர் பேசுகையில், ‘அனீத் எனது சிறந்த தோழி. சமூக ஊடகங்களில் மக்கள் தினைப்பது போல் நாங்கள் காதலர்கள் அல்ல. எங்களுக்குள் கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் காதல் இல்லை. கெமிஸ்ட்ரி என்றால் காதல் என்று அர்த்தமல்ல, ஆறுதல், பாதுகாப்பு, ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வது’ என்றார்.

மோஹித் சூரி இயக்கிய 'சையாரா திரைப்படம் ஜூலை 18 அன்று வெளியானது. இது உலகளவில் சுமார் ரூ.570 கோடி வசூலித்தது. தற்போது இந்த படம் நெட்பிளிக்ஸில் ஸ்டிரீமிங் ஆகிறது.

1 More update

Next Story