ஆவணப்படமாகும் அஜித்தின் கார் ரேஸ் பயணம் - ஏ.எல்.விஜய் இயக்குகிறாரா?

அஜித்குமார், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
ஆவணப்படமாகும் அஜித்தின் கார் ரேஸ் பயணம் - ஏ.எல்.விஜய் இயக்குகிறாரா?
Published on

சென்னை,

குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிப்பது தெரிந்த கதை. இது அஜித்குமாரின் 64-வது படமாகும்.

கார் பந்தய வீரரான அஜித்குமார், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அது முடிந்ததும் புதிய படத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த ஆவணப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் கிரீடம்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com