’அகண்டா 2’: காலவரையின்றி ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு

“அகண்டா 2” திரைப்படம் இன்று வெளியாக இருந்தநிலையில், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனுவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “அகண்டா 2” திரைப்படம் இன்று வெளியாக இருந்தநிலையில், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் புதிய ரிலீஸ் தேதியை தெரிவிக்காமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட் பதிவில், “கனத்த இதயத்துடன், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் அகண்டா 2 திட்டமிட்டபடி வெளியாகாது என்பதை மிகவும் வேதனையுடன் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். படத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொருக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறோம். இதற்காக மனமார்ந்த மன்னிப்புப்புக்கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






