பிரசாந்த் நீலை சந்தித்த அகில் அக்கினேனி...புதிய பட பேச்சுவார்த்தையா?

அகில் அக்கினேனி தற்போது ’லெனின்’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.
சென்னை,
இயக்குனர் பிரசாந்த் நீலுடனான அகில் அக்கினேனியின் சமீபத்திய சந்திப்பு திரைப்பட வட்டாரங்களில் புதிய ஊகங்களைத் தூண்டியுள்ளது. இந்த சந்திப்பு புதிய படத்திற்காக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும், தொழில்துறை வட்டாரங்கள் இந்த சந்திப்பை பற்றி சற்று வித்தியாசமான ஒன்றை கூறி வருகிறது. அதன்படி, பிரசாந்த் நீலுடன் நெருங்கமான ஒருவர் அகிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகில் அக்கினேனி தற்போது ’லெனின்’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.
Related Tags :
Next Story






