’உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது’ - இளம் நடிகையை பாராட்டிய ராம் சரண்

’சாம்பியன்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ராம் சரண் கலந்துகொண்டார்.
சென்னை,
மகாநதி, சீதா ராமம் போன்ற கிளாசிக் படங்களை தயாரித்த ஸ்வப்னா சினிமா தற்போது ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நடிப்பில் ’சாம்பியன்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.
இதில் , கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ராம் சரண் கலந்துகொண்டார். அப்போது பேசிய ராம் சரண், அனஸ்வராவை பாராட்டினார். அவர் பேசுகையில்,
’அனஸ்வரா, உங்களுக்கு பெரிய தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும் சிறந்த இயக்குநர்களிடமிருந்தும் அழைப்புகள் வரப்போகின்றன. அதற்குத் தயாராக இருங்கள். திரையுலகில் உங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
மலையாளத் திரையுலகிலிருந்து வந்து, தெலுங்கு மொழியைக் கற்றுக்கொண்டு, இப்படத்தில் தனக்காகத் தானே பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் அனஸ்வரா ராஜன் " என்றார்.






