“2027ல் தொடங்கும் ‘அனிமல் பார்க்’… டபுள் ரோலில் ரன்பீர் கபூர் - வெளியான மாஸ் அப்டேட்

அனிமல் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரன்பீர் கபூர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
2023-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற அனிமல் திரைப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, திரிப்தி டிம்ரி நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 2023-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.
இந்நிலையில், அனிமல் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரன்பீர் கபூர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
‘அனிமல்' திரைப்படத்தின் 2ம் பாகமான 'அனிமல் பார்க்'-ன் படப்பிடிப்பு 2027ல் தொடங்க உள்ளதாக நடிகர் ரன்பீர் கபூர் கூறி உள்ளார். இதில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்திரங்களில் அவரே நடிக்க உள்ளதாகவும், 3ம் பாகமும் படமாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.






