ஆஸ்கர் போட்டியில் இந்திய குறும்படம்

97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 2-ம் தேதி நடக்கிறது.
மும்பை,
சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது. அதன்படி 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 2-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2025ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த அனுஜா என்ற குறும்படம் இடம்பிடித்திருக்கிறது. ஆடம் ஜே.கிரேவ்ஸ் இயக்கியுள்ள இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர்.
Related Tags :
Next Story






