"அரசன்" - ’எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது’; விஜய் சேதுபதி

ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, தனது கதாபாத்திரத்தை பற்றி பேசினார்.
சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு அரசன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. இந்நிலையில், ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, தனது கதாபாத்திரத்தை பற்றி பேசினார். அவர் பேசுகையில்,
"அரசன்" படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது. ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது, வெற்றிமாறன் சாருக்கு நான் நியாபகம் வந்ததாக சொன்னார். உடனே ஓகே சொல்லிட்டேன். எனக்கு எத்தனை நாட்கள் படப்பிடிப்பு இருக்கும்னு தெரியாது ’ என்றார்.
Related Tags :
Next Story






