தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி - போலீசில் நடிகர் சிரஞ்சீவி புகார்

ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் நடிகர் சிரஞ்சீவி புகாரளித்துள்ளார்.
ஐதராபாத்,
தனது புகைப்படங்களை டீப் பேக் வீடியோவாக உருவாக்கி, ஆபாச தளங்களில் வெளியிட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் நடிகர் சிரஞ்சீவி புகாரளித்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இவ்வாறு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்
முன்னதாக ஐதராபாத் கோர்ட்டில் நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்த வழக்கில், தன்னுடைய அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப்பூர்வமற்றவர்கள், வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கில் வணிக லாபத்திற்காக சிரஞ்சீவி பெயர், ஏஐ புகைப்படங்கள் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






