தன்னடக்கத்துடன் இருங்கள் - நடிகை ரீமா கல்லிங்கல்


தன்னடக்கத்துடன் இருங்கள் - நடிகை ரீமா கல்லிங்கல்
x
தினத்தந்தி 1 Jan 2026 6:39 PM IST (Updated: 1 Jan 2026 6:46 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ரீமா கல்லிங்கல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டை முன்னிட்டு வாழ்க்கை தத்துவம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக ரீமா கல்லிங்கல் உள்ளார். இவர் தமிழில் ‘யுவன் யுவதி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார், கேரளாவில் நடிகை மீதான பாலியல் தொல்லை சம்பவத்தையடுத்து நடிகைகள் ரீமா கல்லிங்கல், மஞ்சுவாரியர், பூ பார்வதி, ரம்யா நம்பீஸன் உள்ளிட்ட பல நடிகைகள் இணைந்து பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர்.

இயக்குநர் ஆஷிக் அபுவை திருமணம் செய்த இவர் தனியாக ஒரு நடன பள்ளியையும் நடத்தி வருகிறார். தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கும் ரீமா கல்லிங்கல் பயணத்தின் மீது மிகவும் விருப்பம் கொண்டவராக இருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் 2025-ல் ‘தியேட்டர்’ திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கைத் தத்துவம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் “தன்னடக்கத்துடன் இருங்கள்! காடு உங்களின் இடத்தை காட்டும்... பெரிய படத்துடன் தொடங்குவது ஒரு நல்ல விஷயம். காட்டுப் பகுதியில் உள்ள சிம்மினி அணையின் மத்தியில் இருந்து இந்த ஆண்டு தொடங்குகிறது.அழகான, அமைதியான இந்த இடம் உங்களுக்கு உத்வேகம் ஊட்டும். கூடுதல் புகைப்படங்களை விரைவில் பதிவிடுவேன்” என கூறியுள்ளார்.

நடிகை ரீமா நடிப்பில் ‘தி மித் ஆப் ரியாலிட்டி’ என்ற படத்தில் தென்னை மரத்தில் ஏறும் காட்சிகள் இடம் பெற்றது. இந்த போஸ்டர் வெளியாகி ரீமாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரோல்கள் எழுந்தது.

1 More update

Next Story